ஜப்பான் கடற்படையின் பெரும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.
ஜப்பான் தற்காப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான போர்க்கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
151 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் 220 கப்பல் பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன், இக் கப்பல் நாளை நாட்டில் இருந்து மீண்டும் புறப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் கப்பலின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.
பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, அவுஸ்திரேலியாவில் இருந்தும் போர்க் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment