24 6691d1e66888f
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை

Share

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு, திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”சகல பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. மது பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல்.

இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும். சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும். கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரீக வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது.

இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட இன்று சமூகத்தில் இடம்பெற்று வருகிறது.”என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...