இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதனை எடுத்துக்காட்ட வேண்டுமெனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
இந்த போர்க்குற்ற விசாரணை உள்ளகப்பொறிமுறையோடு இடம்பெறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரும்பான்மையினருக்கும் உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் .
மேலும் இலங்கையைப் புறக்கணிப்பதில் எந்தவித பலனும் இல்லை என தெரிவித்த அவர் எனவும், முதலீடுகளை மேற்கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளையில் அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவும் தாயார் எனவும் ஹம்சாயினி குணரத்தினம் கூறியுள்ளார் .
இலங்கைக்கு வர்த்தகம், கல்வி மற்றும் பிற வழிகளில் நோர்வே தொடர்ந்து உதவ வேண்டும் எனவும் இது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கையில் உள்ள நோர்வே தூதுவர் ஆகியோருடன் கலந்துரையாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment