Gottabhayarajapaksha
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு விசா! – இலங்கை அரசே கோரிக்கை என்கிறது தாய்லாந்து

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat தனது ருவிட்டர் பதிவில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை எவ்வித அரசியல் அடைக்கலம் கோரிவில்லை. இது தொடர்பில் இலங்கை அரசே கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உரிமம் இருப்பதால் கோட்டாபய ராஜபக்ச விசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும். 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்படவுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளார் என ரொய்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...