அரசியல்இலங்கைசெய்திகள்

மே 9 வன்முறையாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்! – பிரதமர் உறுதி

ranil 1
Share

மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” மே – 09 சம்பவத்தின் பின்னர் அரசியலுக்கு வருவதற்கு புத்திஜீவிகள் அஞ்சுகின்றனர். இதற்கான பாதுகாப்பு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆயுத பலம் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபடும் நிலை உருவாகும். சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.

வன்முறைச் சம்பவங்களுடன் அரசியல் கட்சிகளின்கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டுள்ளனர். மொட்டு கட்சியினரும் தொடர்புபட்டுள்ளனர். தனிப்பட்ட தேவை மற்றும் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம்.

விசாரணைகளின் பின்னர் கட்சிகளில் இருந்து அவர்களை நீக்கலாம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றேன். ” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...