தனிமைப்படுத்தல் ஊரங்கை மீறி யாழில் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வீதிகளில் தேவையற்று பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதனை பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து கொக்குவில்– கே.கே.எஸ் வீதியில் ஆரம்பித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அடுத்த மாதம் முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அதிவிரைவு அன்டிஜென் சோதனை முன்னெடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 5 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment