நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின்போது நடுநிலை வகிப்பதென முன்னதாக விக்னேஸ்வரன் தீர்மானித்திருந்தார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னர் இன்று அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவும் ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment