24 6665521bf0db4
இலங்கைசெய்திகள்

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அந்த அனுமதி பல கட்டங்களின் கீழ் வழங்கப்படும், அதன்படி ஒக்டோபர் மாதம் முதல் தொழிற்சாலைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான இறக்குமதி தொடங்கப்படும். பின்னர், இரண்டாம் கட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

மூன்றாவது கட்டமாக, குறிப்பிட்ட வரம்பில் சிறிய கார்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், நான்காம் கட்டமாக, அதாவது 2025ம் ஆண்டில் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு வருடங்கள் பழமையான வாகனங்களே இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...