tamilni 232 scaled
இலங்கைசெய்திகள்

100 பொருட்களுக்கு வட் வரி விதிக்கத் திட்டம்

Share

100 பொருட்களுக்கு வட் வரி விதிக்கத் திட்டம்

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவத் திட்டத்தின் படி, இதுவரை வட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு புதிதாக வட் வரி அறவிடப் போகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான நேற்றைய(15.11.2023) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி 133 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதோடு புதிய வரிகள் ஊடாக 800 பில்லியன் ரூபாயை அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும். வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப்போகின்றனர். தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப்போகின்றனர்.

அதேநேரம் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் 18 வீதம் வரி அறவிடப்படப் ​போகிறது. தேயிலை கொழுந்து உள்ளிட்ட மேலும் பல பொருட்களுக்கு வட் வரியை அறவிடப்போகின்றனர்.

எனினும் இது எவற்றையும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் வெளியிடவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...