நாட்டில் 257 நிலையங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 20 – 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று மாத்திரம் மூவாயிரத்து 136 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை எட்டு லட்சத்து 87 ஆயிரத்து 430 பேருக்கு கொவிஷு ல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்- – ஏ தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் டோஸ், 41 ஆயிரத்து 749 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 97 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 758 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment