பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும்போது, தடுப்பூசி அட்டையை கொண்டுசெல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment