11 32
இலங்கைசெய்திகள்

அமெரிக்க நிதி நிறுத்தம் : ஐக்கிய நாடுகளின் இலங்கை திட்டங்கள் பாதிப்பு

Share

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதித்துள்ளது.

அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு உட்பட்டவையும் அடங்கும் என்று, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் கூறியுள்ளார்.

இந்தத் திட்டங்கள் சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை, அமெரிக்க உதவி அதன் ஆண்டு ஒதுக்கீட்டில் சுமார் 12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ஃபிரான்ச் கூறியுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாடு, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க நிதி மற்றும் ஈடுபாடு குறித்த பொதுவான மதிப்பாய்வை மேற்கொள்ளும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
school closd
இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை – பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளைய தினம், கண்டி மாவட்டத்தின்...

hgfn
இலங்கை

வெள்ள அபாயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த...

vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...