24 665aa84a4676e
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் டொலர் முதலீடு

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் டொலர் முதலீடு

இந்த ஆண்டுக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற முதலீட்டு இலக்கை முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அதானி (Adani) நிறுவனம் மட்டுமே 820 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏனைய வர்த்தக நிறுவனங்களுடன் 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...