24 665aad62e3b1a
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

Share

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி 3,840,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தகர் நேற்று (31) இரவு 10:00 மணியளவில் டுபாயில்(dubai) இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-648 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் பொதிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...