Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

அமெரிக்க இராஜதந்திரிகள் வருகை! – பின்னணியில் பஸில் என்கிறார் விமல்

Share

” எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற அரசியல் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின்போது எம்சிசி உடன்படிக்கையை செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்நிலையில் புதிய கோணத்தில் அந்த உடன்படிக்கையை செயற்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்க இராஜதந்திரிகள் இங்குவருகின்றனர்.

இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்தால் திட்டத்தை இலகுவில் நிறைவேற்றிவிடலாம் என்பதால்தான், அதற்கான சூழ்நிலையை நிதி அமைச்சர் ஏற்படுத்திக்கொடுக்கின்றார் .

தேசப்பற்றாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை ‘அசிங்கமான’ அமெரிக்கர் சீரழிக்கின்றனர். ” – என்றார் விமல்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...