UNP
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்குத் தோள்கொடுக்க எம்.பிக்களாகும் ஐ.தே.க. உறுப்பினர்கள்?

Share

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கவுள்ளனர் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமராகப் பதவியேற்றுள்ள தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியாக இவர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 6 பேர் பதவி விலகச் செய்வதற்காக தற்போது அவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவர்கள் பதவி விலக இணங்கும் பட்சத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் எம்.பிக்களாகப் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மருந்து, உரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...