jaffna univercity
இலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

Share

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் பகுதி எதிர்வரும் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா பெருந்தொற்றின் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ் விழாவானது அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 7ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தவர் ஊடகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் பரவலடைந்துவரும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தி பட்டங்களை உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...