மங்கள சமரவீரவை மனதில் கொண்டு முதல் நிபந்தனையாக, “இலங்கையர்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர வேண்டும். “இலங்கையர்”, அடையாளத்தை காப்பாற்ற வேண்டும். – இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“இலங்கையர்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர வேண்டும். “இலங்கையர்”, அடையாளத்தை காப்பாற்ற வேண்டும்.
இரண்டாவதாக, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற நீதியின் ஆட்சியை இலங்கையில் நாம் கொண்டு வர வேண்டும்.
அடுத்தது, “பன்மைத்துவம்”. இலங்கை என்பது பல மொழி பேசும், பல மதங்களை பின்பற்றும், பல இனத்தவர் வாழும் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, “மதசார்பின்மை”. மங்களவும், நானும் இதில் மிகவும் உடன்பாட்டாளர்கள். அதாவது, மதத்தலைவர்கள், குறிப்பாக தேரர்கள் விகாரைகளுக்கும், குருக்கள் கோவில்களுக்கும், மெளளவிகள் மசூதிகளுக்கும், பிதாக்கள் தேவாலயங்களுக்கும் போய் மக்களை வழி நடத்த வேண்டும்.
அரசியலை வாக்களிக்கும் மக்களுக்கும், வாக்கு வாங்கி வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் விட்டு விட வேண்டும். 225 பேரும் பிழையானவர்கள் என்றால், அவர்களை நீக்கி சரியான சரியான 225 பேரை மாத்திரம் தெரிவு செய்யுங்கள்.
முதற்கட்டமாக இன்று, நாம் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற முறையில், 21ம் திருத்தம் என்ற வரைபை சபாநாயகருக்கு சமர்பித்துள்ளோம். அதில் ஜனாதிபதி முறைமையை அகற்ற கூறியுள்ளோம்.
“கவுன்சில் ஒப் ஸ்டேட்” என்ற புதிய அரசியலமைப்பு யோசனையையும் கூறியுள்ளோம். அது என்ன? 225க்கு மேலதிகமாக தொழில் வல்லுனர்கள், இளைஞர்கள், பெண்கள் தமது பிரதிநிதிகளை நியமிக்க வழி ஏற்படுத்துகிறோம்.
அடுத்து, அரசுக்கு எதிராக, ஜனாதிபதிக்கு எதிராக, நம்பிக்கை இல்லா பிரேரணையை சில தினங்களில் நாம் சமர்பிப்போம். அதன் பிறகு 225 பேரில் “மக்களுடன் நிற்பவர் யார்”, “கோத்தாபயவுடன் நிற்பவர் யார்” என்பதை மக்களால் தெளிவாக அறிய முடியும். – என்றார்.
#SriLankaNews
Leave a comment