தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவாகத் தலையிட்டு தீர்வுகளை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை என அதன் தலைவர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார்.
அதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிற்சங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment