இலங்கைசெய்திகள்

தடையின்றி மின்சாரம்!

Power 1
Share

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்காமல் அதனைச் செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை மீள்திருத்தம் செய்வதே சிறந்தது எனத் தெரிவித்தார்.

பெப்ரவரி 2022 முதல் இலங்கை தினசரி மின்வெட்டுகளை அனுபவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் மின்வெட்டு 13 மணி நேரமாக நீடித்தது, இது இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...