16 4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்

Share

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெலாரஸில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்கும்பலின் தலைவன் லொக்கு பட்டி என்ற சுஜீவ ருவன் குமார அந்நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் வழி நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தென் மாகாணத்தை மையமாக கொண்ட பல கொலைகளுக்கு பின்னணியில் லொகு பட்டி மூளையாக செயல்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பெலாரஸ் நாட்டின் மற்றுமொரு பகுதியில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொம்ப அமில ஆகியோரை பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், காஞ்சிபனை உள்ளிட்ட சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் வழக்கில் பன்னல முன்னாள் உறுப்பினர் கைது: ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை இடைநீக்கம் – சஜித் பிரேமதாச உறுதி!

தென் கடற்பகுதியில் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின்...

25 6920040ee569d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் அச்செழுவில் சோகம்: கள்ளுத்தவறணையில் வைத்துத் தாக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்,...

294916 untitled design 10
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்னைக்குப் பயணம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டார்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 21) காலை கட்டுநாயக்க விமான நிலையம்...