WhatsApp Image 2022 04 01 at 2.14.45 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலைமையை புரிந்துகொண்டு தீர்வை முன்வைக்க வேண்டும்! – ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு 

Share

” நான் தான் நன்றாகவே செய்தேன் எனக் கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று நன்றாகவே பதில் வழங்கியுள்ளனர். இதனை புரிந்துகொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாகும். அதற்கு காரணம் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது.

ஜனாதிபதிக்கு எதிராக அவரின் பதவியிலிருந்து வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் அனேகமானவர்கள் இளைஞர்களே.

இதே இளைஞர்கள் தான் அன்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று முன்னின்று வாக்களித்தார்கள். ஆனால் இன்று அதே இளைஞர்கள் ஜனாதிபதியை பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோஷம் இடுகின்றார்கள் அந்தளவிற்கு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டமானது எந்தவிதமான அரசியல் கட்சிகளின் தலையிலோ அல்லது பொது அமைப்புகளின் தலையிலோ இல்லாமல் மக்களாகவே முன்வந்து இந்த ஆரப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள். இது போன்ற இன்னும் பல போராட்டங்கள் இடம்பெறும்.

எனவே இதை புரிந்துகொண்டு ஜனாதிபதி உரிய தீர்வினை எடுக்க வேண்டும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...