ஹனா சிங்கர் eee
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

Share

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கையின்  நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும் இடையில் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜெயவர்த்தனபுர, கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக விளக்கமளித்த கமால் குணரத்ன, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட சுமார் ஒரு தொன் அளவிலான போதைப்பொருள்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...