குட்டியப்புலம் மற்றும் வயாவிளான் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாவனைக்கு உதவாத மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 25 வயது உடையவர்கள் என கூறப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த நபர்கள் முச்சக்கர வண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் மாடு ஒன்றினை இறைச்சியாக்கி, மனித பாவனைக்கு உதவாத முறையில் பொதி செய்து விற்பனைக்கு எடுத்து செல்ல முற்பட்ட பொழுது புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது மாட்டு கழிவுகள் மற்றும் சாணம் , தோல், குடல் என்பன இது இந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



#SriLankaNews
Leave a comment