மன்னார் – அந்தோனிபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, 251 கிலோகிராம் மஞ்சள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மஞ்சள் இலுப்பைக்கடை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a comment