தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்!
கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது
இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திலிருந்து அமுல்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
இந்தச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் காண விசேட பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் 6 ஆயிரத்து 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் குறித்த பஸ்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பது அவசியம் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பயணிகள் அனைவரும் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கிறார்களா எனவ சோதனை மேற்கொள்ள வேண்டியது பஸ் நடத்துநர்களின் கடமை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment