Harsha de Silva
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசில் வெளிப்படை தன்மை அவசியம்! – ஹர்ஷ டி சில்வா

Share

நம்பிக்கை இல்லாத மற்றும் சர்வதேச பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத அரசால் எவ்வாறு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

” மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்த, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வாறான கூற்றின் பின்னணியில் உள்ள அர்த்தம் என்ன? பொருளாதார சீர்திருத்தங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால் அவசரகாலச் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கையே இதன்மூலம் வழங்கப்படுகின்றது.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே பொருத்தமான தீர்வு, ஆகவே உண்மையை வெளிக்கொண்டு வந்து அவர்களின் ஆதரவைப் பெற்று இணைந்து செயற்படுமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சர்வக்கட்சி அரசில் வெளிப்படை தன்மை அவசியம். மாறாக அமைச்சு பதவிகளை இலக்காக கொண்டதாக இருக்கக்கூடாது.” – எனவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....