மஹாவ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான ரயில் சேவைகள் 2023 ஜனவரி 15 முதல் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்,
ரயில் பாதையின் திருத்தப் பணிகள் காரணமாகவே ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு தொடர்ச்சியாக ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன, இதனால் தற்போது எந்தவொரு பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். ஆகவே 2023 ஜனவரி 15 முதல் ஐந்து மாதங்களுக்கு மஹாவ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.
இதன் பின்னர் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்தார்.
#SriLankaNews
Leave a comment