குளிப்பதற்குச் சென்ற நபருக்கு சோகம்
இலங்கைசெய்திகள்

குளிப்பதற்குச் சென்ற நபருக்கு சோகம்

Share

குளிப்பதற்குச் சென்ற நபருக்கு சோகம்

காலியில் நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

காலி தர்மபால மாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற போதே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் நள்ளிரவு 12.00 மணி ஆகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் உறவினர்கள் சென்று ​​கிணற்றில் இருந்த வலையை உடைத்து பார்த்தபோது ​​சுமார் 15 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...