இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பாக்குவிற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்

Share
26 14
Share

வவுனியாவில் பாக்குவிற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்குவிற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின் வயல்வெளி கரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும் இவ்வாறான ஒருவகை பாக்கு விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

குறித்த வியாபார நிலையங்களிற்கு வருகை தரும் இளைஞர்கள் தமது வாகனங்களை பிரதான வீதிகளை அண்டி நிறுத்துவதால் அந்த பகுதிகளால் பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

பிரதான வீதி மற்றும் சந்தை அமைந்துள்ள பகுதிகளானது அதிகமான வாகனங்கள் சென்று வருகின்ற ஒரு வீதியாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு பாக்கினை கொள்வனவு செய்யவரும் இளைஞர்களின் செயற்பாடுகளல் வாகனநெரிசல் ஏற்ப்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்து சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

எனவே, குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, அந்த பாக்குவிற்பனை நிலையங்களில் ஒருவகை போதைப்பாக்கு விற்பனையும் இடம்பெறுவதாகவும் தெரிவித்து கடந்த காலங்களில் வவுனியா பொலிஸாரால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...