காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்
இலங்கைசெய்திகள்

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Share

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று குறையும் எனவும் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்திய கூறுகள் உண்டு என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (06.07.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமாகக் காணப்படும். மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் அதிகரிப்பு (சுமார் 2.5 – 3.0 மீ) எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...