Sajith
இலங்கைஅரசியல்காணொலிகள்செய்திகள்பிராந்தியம்

சஜித் பிரேமதாசவின் 55 ஆவது பிறந்தநாள் இன்று!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் 55 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நல்லூர் கோவிலுக்கு சென்ற சஜித் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

1967 ஜனவரி 12 ஆம் திகதி பிறந்த சஜித் பிமேதாச, கொழும்பு றோயல் கல்லூரியில் பாடசாலை கல்வியை மேற்கொண்டார். லண்டனில் உயர் கல்வியை பயின்றார்.

இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச, 1993 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவருகின்றார்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கிய அவர் வெற்றிபெற்றார். ஐக்கிய தேசியக்கட்சி அரசில் பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

2011 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராகக் களமிறங்கினார். எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி பிளவு பட்டது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை வென்றது. தற்போது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுவருகின்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...