” விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்..” என அம்பாறை நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டுக்கொண்டு வந்து, கிராமவாசிகளை அச்சுறுத்தினர் எனக் கூறப்படும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“புலிகள் தாக்குகிறார்கள்” என கூச்சலிடும் சத்தம் கேட்க, மின் வேலியை பாதுகாக்கும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை அச்சமுற்ற கிராமவாசிகள் பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கமான 119 தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அம்பாறை மற்றும் அரந்தலாவ பொலிஸ் விசேட படைப்பிரிவு மற்றும் இராணுவத்தினர் வந்து பொலிசாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.
திவுலான காட்டுப் பிரதேசத்துக்குள் மறைந்திருந்த போது, சந்தேக நபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#SriLankaNews