யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

20220403 122442

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில், ஜே வி பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்ததன் காரணமாக இன்றைய தினம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர் சந்திப்பு நடக்க இருந்த இடத்தைச் சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை அலுவலகத்திற்குள்ளே நிறுத்துமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை வீதியில் பயணிக்க முடியாது எனவும் ஊடகவியலாளர்கள் ஊரடங்கு வேளையில் வீதியில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்த பொலிஸார் கைத்தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளை கருதி வீதியில் பயணிப்போர் தமக்குரிய அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி வீதிகளில் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிசாரினால் ஊடகவியலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அனைவரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் .

#SriLankaNews

Exit mobile version