இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னார் ஊடாக இந்தியா செல்ல முற்பட்டோருக்கு விளக்கமறியல்!

image 59e271607c
Share

மன்னார் – தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 12 பேர் வியாழக்கிழமை(22) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த 12 நபர்களில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

அவர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரியவருகிறது.

குறித்த 12 பேரும் வெள்ளிக்கிழமை(23) மாலை மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளடங்களாக 5 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...