kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர்!

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால்தான் வீதியில் இறங்கி செல்லமுடியவில்லை. கோ ஹோம் கோத்தா என்ற கோஷம் எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கோத்தா கோ ஹோம் என்ற விடயத்தை நான்தான் முதன் முதலில் வலியுறுத்திக் கூறினேன். அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத அவரை வேட்பாளராக களமிறக்க வேண்டாம் என அழுத்திக் கூறினேன்.

ஆனால் குடும்ப உறுப்பினர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ச தவறான முடிவை எடுத்தார். அந்த தவறான முடிவால்தான் நாடு இன்று பற்றி எரிகின்றது. கோத்தா போட்டியிட்டதால் நான் அரசிலிருந்து வெளியேறினேன்.

மைத்திரிபால சிறிசேன சொல்வதெல்லாம் பொய். 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று கதைக்கின்றார். ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அவரின் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். எனக்கும் அமைச்சு பதவி தருவதாக சொன்னார். ஆனால் நான் செல்லவில்லை.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கூற்றை இல்லையென சொல்லவேண்டாம், தொடர்புபடாத நீங்களும் சாபத்துக்கு உள்ளாக வேண்டிவரும். இன்று வீதியில் இறங்கி செல்ல முடியவில்லை. கோ ஹோம் கோத்தா என மக்கள் கூச்சலிடுகின்றனர். மஹிந்தவை மக்கள் மன்னர்போல்தான் கருதினர். அவருக் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...