நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும். ஒரு சில வர்த்தகர்கள் பொருள்களை பதுக்கி போலியான உணவுப்பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்.
கொரோனா பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டுவருகிறது – என்கிறார்.
இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீனி, பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை பெறுவதற்கு மக்கள் வரிசையில் நிற்கும் நிலையை அவதானிக்ககூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment