எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லசந்த அழகியவன்ன
எதிர்வரும் காலங்களில் சமையல் எரிவாயுவை சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தா இராஜாங்க அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்படி தெரிவித்துள்ளார்.
தற்போது லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தமது முந்தைய விலையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்து வரும் அதேவேளை, லாப்ஸ் நிறுவனம் கடந்த 20 ஆம் திகதி முதல் புதிய விலையில் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. இன்று திங்கள் முதல் தட்டுப்பாடின்றி சந்தையில் எரிவாயுவை பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment