வேறு வழியே இல்லை: ரணில் அதிரடி

Ranil

பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் 06 நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தமது நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியை பெற்றுக்கொண்டுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளில் எந்த நாட்டுக்கும் பாதிப்பான மற்றும் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் எதனையும் நிதியம் விதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கி இருக்கும் டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று டொலர் நெருக்கடி தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தார்.

சர்வதேச நாணய நிதியம், கடனுதவியை வழங்கும் போது, நிறைவேற்ற முடியாத மற்றும் பாதிப்பான நிபந்தனைகளை விதிக்காது என எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

#SrilankaNews

Exit mobile version