இலங்கைசெய்திகள்

அச்சத்தில் வாழும் நாட்டு மக்கள்: பொலிஸ் மா அதிபர் தகவல்

Share

அச்சத்தில் வாழும் நாட்டு மக்கள்: பொலிஸ் மா அதிபர் தகவல்

நாட்டு மக்கள் பாதாள குழுசெயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

நாட்டுமக்கள் பாதாள குழுசெயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேவேளை 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தடைசெய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...