கிரிபத்கொட பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது.
கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த 36 வயதுடைய தனஞ்சய அனுருத்த மற்றும் 27 வயதுடைய அவரது மனைவி ஆகியோரே தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தனஞ்சய கடந்த 22 ஆம் திகதி கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி நேற்று (25) காலை உயிரிழந்தார். அவர்களின் ஐந்து வயது மகள் தற்போது நிர்க்கதியாகியுள்ளார்.
Leave a comment