WhatsApp Image 2022 03 23 at 5.39.57 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது! – ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய அநுர

Share

” தம்மால் முடியாது என்பதை இந்த ஆட்சியாளர்கள் எல்லா விதத்திலும் நிரூபித்துவிட்டதால், வீட்டுக்கு செல்லுங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, இந்த ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அரச எதிர்ப்பு பேரணியும், போராட்டமும் இன்று மாலை நுகேகொடையில் இடம்பெற்றது.

தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும், நாட்டில் தலைதூக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரமுகர்களும், பெருந்திரளான மக்களும் பங்கேற்றிருந்தனர். இதனால் நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

இதில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு நடைபெற்றது. நாட்டு வளங்களை கொள்ளையடித்த பஸில், மத்திய வங்கியை கொள்ளையடித்த ரணில், தரகுப்பணம் வழங்கிய கப்ரால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களால் என்ன பேச – கலந்துரையாட முடியும்?

ராஜபக்சக்களே போதும், போங்கள் என நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். எனவே, ஆட்சியாளர்களை கட்டாயம் வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியும். அரசமைப்பின் பிரகாரம் தேர்தலுக்கு காலம் உள்ளது. ஆனால் மக்கள் போராட்டத்தால் அதனை செய்ய முடியும்.

நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டை சீரழித்துவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஊழல்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டுக்கொள்கின்றனர். இதுதான் எமது நாட்டு அரசியல். அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் குறைகூறுவது வேடிக்கையாகிவிட்டது.

எனவே, ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்பது மட்டுமல்ல, புதியதொரு கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பும் எமக்கு உள்ளது.” – என்றார் அநுர .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...