அம்பாறை -காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தின் நான்கு உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 -1.30 மணி வரையில் திருடனொருவன் தலைக்கவசத்துடன், முகக்கவசம் அணிந்து ஆலய மதில்மேல் ஏறி ஆலயத்திற்குள் சென்று, சுமார் ஒருமணி நேரம் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ் விடயமானது ஆலயத்தின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் காரைதீவு மற்றும் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment