நாட்டின் தலைவரானார் சபாநாயகர்!
நாட்டின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா செயற்படவுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே சபாநாயகர் தற்காலிக தலைவராக செயற்படவுள்ளார்.
ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்ளும் முகமாக இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார் .
இதேவேளை,பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்தவாரம் இத்தாலி சென்றுள்ளார். பிரதமர் நாளை அல்லது நாளைமறுதினம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment