வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையின் கண்ணை தனது கைவிரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
67 வயதுடைய தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயது சிறுவனே தந்தை கண்ணை தோண்டியுள்ளார்.
இந்த செயலுக்கு போதைப்பொருள் பாவனையே காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் தந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸார் அவரது மகனை கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment