கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்தை அரசு ரகசியமாக அமெரிக்காவுக்கு விற்று வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நாட்டுக்கு இழைத்துவிட்டது அரசு. நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு எதிராக நாம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பானம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டினுடைய வளங்களை தமது தனிப்பட்ட வளங்கள் எனக் கருதி அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
நாட்டின் வளங்களை விற்பனை செய்வது தேசத் துரோகச் செயலாகும். மக்கள் ஆணையை மீறி தனிப்பட்ட கமிஷன் மோசடிகளையும் நிறைவேற்ற நாட்டின் வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கென நாம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டை மீட்பதற்கு விரைவில் பெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment