அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பேரக் குழந்தையை முதன்முதலில் பார்வையிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற போது தான், தனது பேத்தியை முதன்முறையாகப் பார்க்க கிடைத்ததாகவும் ஜனாதிபதி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்தமைக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment