” படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? ” – என்று கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
எமக்கான பாதுகாப்பை சுயமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். நான் வாகனத்தில் பயணக்கும்போது, எமது கட்சி தோழர்கள் சூழ இருந்து பாதுகாப்பை வழங்குவார்கள்.
நாம் முட்டாள்தனமாக செயற்படுவதில்லை. முன்னாயத்தமாக இருப்பதால்தான் முட்டை வீச்சு தாக்குதல் நடத்த வந்தவர்களை மடக்கிபிடிக்ககூடியதாக இருந்தது. நுகேகொடை கூட்டத்துக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தக்கூடியதாக இருந்தது.
நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், தோழர் நான் வருகின்றேன் என தெரியப்படுத்துவேன், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். நாளையும் நான் இப்படிதான் செயற்படுவேன்.
வாகனத்தில் பயணிக்கும்போது கல் வீச்சு அல்லது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தி, விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பலியெடுக்க முடியும் என நினைக்கின்றீர்களா? அவ்வளவு எளிதில் எம்மை வீழ்த்திவிடமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்பாகவே இருக்கின்றோம். எனது வாகனத்துக்கு ‘ஹெல்மட்டுடன்’ ஏறியவர் எனக்கு பாதுகாப்பு வழங்கும் தோழர். மழையால்தான் அவர் வாகனத்தில் ஏறினார். அதில் உள்ள தவறு என்ன? ” – என்றார்.
#SriLankaNews
Leave a comment