காலிமுகத்திடலில் இன்று மாலை தமிழ் மொழியில் மிகவும் உணர்வுப்பூர்வமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் போராட்டக் களத்தில் நேற்று சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இன், மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஐக்கியப்படும்வேளையில், பிரிவினை எதற்கு எனவும் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment