சமைத்து வைத்த உணவிலிருந்த அப்பளம் ஒன்றை தாயாருக்குத் தெரியாது எடுத்து சாப்பிட்ட காரணத்தால் 5 வயது மகளுக்கு தாய் வாயில் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் விநாயகர் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் குறித்த தாய் அக்கராயன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை தொழிலுக்கு சென்ற வேயை இந்தக் கொடூர செயல் இடம்பெற்றுள்ளது எனவும் இதனை அவதானித்த சிறுமியின் தாத்தா பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கைது செய்த தாயாரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
Leave a comment